உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடியில் த.வெ.க., பூத் கமிட்டி கூட்டம்

சாயல்குடியில் த.வெ.க., பூத் கமிட்டி கூட்டம்

சாயல்குடி: சாயல்குடியில் உள்ள தனியார் மகாலில்த.வெ.க., சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமை வகித்தார். கடலாடி மேற்கு ஒன்றியத் தலைவர் தமிழ் செல்வநாதன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் வரவேற்றார். மேற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வீரபாண்டி, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் முத்துக்குமரன், மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் கார்த்திகேய சேதுபதி,நிர்வாகிகள் மாதவடியான், ஸ்ரீதர், காளிதாஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கட்சியின் செயல் திட்டம் மற்றும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்த விவாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை