உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொழிலாளியை கொல்ல முயற்சி இருவருக்கு சிறை தண்டனை

தொழிலாளியை கொல்ல முயற்சி இருவருக்கு சிறை தண்டனை

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே புளியங்குடியில் முன்விரோதத்தில் தொழிலாளியை கம்பியால் தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் இருவருக்கு சார்பு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது.புளியங்குடியைச் சேர்ந்த தொழிலாளி திருகண்ணன் 54. இவர் 2022 பிப்., 8 ல் ஆடு மேய்த்து கொண்டிந்தார். அப்போது சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்னையை மனதில் வைத்துக்கொண்டு கருப்பணன் மகன்கள் திருமுருகன் 39, திருஞானம் 27, ஆகியோர் தகராறு செய்து திருகண்ணனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ய முயன்றனர். இதையடுத்து இருவரையும் முதுகுளத்துார் போலீசார் கைது செய்தனர்.இவ்வழக்கு விசாரணை முதுகுளத்துார் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. திருமுருகனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3000 அபராதமும், திருஞானத்திற்கு 2 ஆண்டுகள் சிறை, ரூ.2000 அபராதம் விதித்து நீதிபதி வேலுச்சாமி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் நீதிமன்ற விசாரணையை சிறப்பாக கையாண்ட முதுகுளத்துார் போலீசாரை மாவட்ட எஸ்.பி., சந்தீஷ் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி