மேலும் செய்திகள்
அடைக்கலம் காத்த அம்மன் கோயில் முளைப்பாரி
28-Sep-2024
முதுகுளத்துார்: முதுகுளத்துார் சித்திரங்குடி உலகநாயகி அம்மன் கோயில் முளைக்கொட்டு விழா நடந்தது.ஒரு மாதத்திற்கு முன்பு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். பெண்கள் கும்மி அடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் வந்தனர். விநாயகர் கோயிலில் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் முக்கிய விதிகளில் பால்குடம், அக்கினிசட்டி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.மூலவரான உலகநாயகி அம்மனுக்கு 21 வகை அபிஷேகம், பூஜை நடந்தது. மக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மக்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக வந்தனர்.முளைக்கொட்டு திண்ணையில் இருந்து முளைப்பாரி துாக்கி சென்று ஊருணியில் கரைத்தனர். ஏற்பாடுகளை சித்திரங்குடி கிராம மக்கள் செய்தனர்.
28-Sep-2024