மத்திய அமைச்சர் சுவாமி தரிசனம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தார். நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், குடும்பத்தினரை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.,தலைவர் முரளிதரன், கோயில் ஊழியர்கள் வரவேற்றனர். பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடினர். சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக மத்திய அமைச்சர் ராமேஸ்வரம் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் சிறப்பு பூஜை செய்து தரிசனம் செய்தார்.