உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 16,000 கணினி அறிவியல் ஆசிரியர்களை ஏமாற்றிய கல்வித்துறை அமைச்சர் சங்க மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு

16,000 கணினி அறிவியல் ஆசிரியர்களை ஏமாற்றிய கல்வித்துறை அமைச்சர் சங்க மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு

ராமநாதபுரம்:''பி.எட்., முடித்த கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்றுநர் பணி வழங்குவதாக கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார். அதை நிறைவேற்றாமல் 16 ஆயிரம் பேரை அவர் ஏமாற்றி விட்டார்,'' என, ராமநாதபுரத்தில் தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் வெ.குமரேசன் குற்றம் சாட்டியுள்ளார்.அவர் கூறியதாவது: மாநில அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 10 கணினிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 20 கணினிகளைக் கொண்டு ஆய்வகங்களை அமைத்துள்ளது. இங்கு கணினி பயிற்றுநர் நியமனம் செய்யப்படவில்லை. அரசு, அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் 96 சதவீதம் இல்லம் தேடி கல்வியில் பணிபுரிந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக கல்வி அமைச்சர் மகேைஷ சந்தித்து பலமுறை வலியுறுத்தினோம். அவர் பி.எட்., முடித்த கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு பணி வழங்குவதாக கூறினார். ஆனால் அதை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டார். இதனால் கணினி அறிவியல் பாடத்தில் பி.எட்., பட்டம் பெற்ற 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனைக் கண்டித்தும், உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி கணினி அறிவியல் பாடத்தில் பி.எட்., பட்டம் பெற்றவர்களை கணினி அறிவியல் கற்றுத்தர நியமிக்க வலியுறுத்தியும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் எங்களது சான்றிதழ்களை ஒப்படைக்கும் போராட்டம் நடத்த உள்ளோம்.எங்களுக்கு ஆதரவளித்து தமிழ்நாட்டில் கணினி அறிவியலை தனிப்பாடமாக்கி கணினி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்திய பா.ம.க., தலைவர் ராமதாசுக்கு நன்றி என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை