உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் போராட்டம் நடத்த சங்கத்தினர் முடிவு

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் போராட்டம் நடத்த சங்கத்தினர் முடிவு

கமுதி: கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.,ல் மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்தால் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் செல்வகுமார் கூறினார். அவர் கூறியதாவது:ஊராட்சிக்கு உட்பட்ட ஊரகப் பகுதிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கு இரவு நேர ஆய்வுக் கூட்டங்கள், விடுமுறை ஆய்வுக் கூட்டங்கள் பணி நெருக்கடி அழுத்தங்களை அரசு குறைக்க வேண்டும்.கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் புதிய ஊழியர்கள் கட்டமைப்பு இல்லை தனி ஊழியர்கள் கட்டமைப்பு அமைக்க வேண்டும். நிறைவேற்றப்படாத பல்வேறு கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மறுத்தால் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும்.வரும் பிப்., மாதம் ராமநாதபுரத்தில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில் கோரிக்கைகள் குறித்து கலந்து ஆலோசித்து போராட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை