உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

திருவாடானை: மழையால் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முத்துராமு கூறினார்.அவர் கூறியதாவது:ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சம் எக்டேர் நிலங்களில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. ஜன.13ல் பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியும், சில பகுதிகளில் தரையோடு சாய்ந்தும் நெற்கதிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம், சிக்கல் பகுதிகளில் அறுவடை இயந்திரத்திற்கு கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை