உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உப்பூரில் மீன் மார்க்கெட் அமைக்க வலியுறுத்தல்

உப்பூரில் மீன் மார்க்கெட் அமைக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.கிழக்கு கடற்கரை பகுதிகளான மோர்ப்பண்ணை, திருப்பாலைக்குடி, கடலுார், முள்ளிமுனை, காரங்காடு உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான மீனவர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மீனவர்கள் நாட்டுப் படகுகளில் பிடித்து வரப்படும் மீன்களை ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்துார் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி கிராமங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். இதனால் மீனவர்கள் மீன்களை விற்பனை செய்வதற்கு சிரமப்படுவதுடன் பல மணி நேரம் கிராமங்களை சுற்றி வருவதால் மீன்களின் தரம் கேள்விக்குறியாகிறது. எனவே கிழக்கு கடற்கரை மீனவர் பகுதி கிராமங்களுக்கு மையப்பகுதியான உப்பூர் பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.இப்பகுதியில் மீன் மார்க்கெட் அமைப்பதால் பொதுமக்களும் ஒரே இடத்தில் பல வகையான தரமான மீன்களை வாங்கிச் செல்ல முடியும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீன் மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை