உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / துாண்டில் வளைவு திட்டப்பணி  விபரம்; அறிவிப்பு பலகை  வைக்க வலியுறுத்தல்

துாண்டில் வளைவு திட்டப்பணி  விபரம்; அறிவிப்பு பலகை  வைக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம்; தங்கச்சிமடம் ஊராட்சியில் செயல்படுத்தப்படும் துாண்டில் வளைவு திட்டம் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில், அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் வலி யுறுத்தினர். அக்கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளர் சவரிராஜ் தலைமையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். இதில், தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை குழுமத்தால் தங்கச்சிமடத்தில் செயல்படுத்தப்படும் துாண்டில் வளைவு திட்டம் குறித்து பணிகள் நடை பெறும் இடத்தில் அறிவிப்பு பலகை இல்லை.மாந்தோப்பை உள்ளடக்கிய துாண்டில் வளைவு அமைக்க வேண்டும். மேலும் என்னத்திட்டம், யாரால் துாண்டில் வளைவு பணிகள் செயல்படுத்தப்படுகிறது. ஒப்பந்ததாரர் பெயர், என்ன அளவில் கட்டப்படுகிறது என்ற விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வைக்க வேண்டும் என வலியுறுத்தி யுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை