உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடற்கரையில் கடற்புற்கள் அகற்றுவதற்கு வலியுறுத்தல்

கடற்கரையில் கடற்புற்கள் அகற்றுவதற்கு வலியுறுத்தல்

தொண்டி : தொண்டி கடற்கரையில் ஒதுங்கும் கடற்புற்களால் கரையில் நடந்து செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கடற்புற்கள் கடலில் வாழும் பூக்கும் தாவர வகையை சேர்ந்தது. இவை கடலுக்கு அடியில் புல்வெளி போன்ற அமைப்பாக இருக்கும். கடலில் வாழும் உயிரினங்களுக்கு உணவாகவும், தங்குமிடமாகவும் திகழ்கிறது. கடற்கரையோரங்களில் ஆழமில்லாத பகுதியில் அடர்த்தியாக காணப்படும். அலைகளால் இந்த கடற்புற்கள் கடற்கரைக்கு ஒதுக்கப்படுகிறது. எஸ்.பி.பட்டினம் முதல் தேவிபட்டினம் வரையிலான கடற்கரையோரங்களில் ஒதுங்கியுள்ளதால் நடந்து செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தீர்த்தாண்டதானம் கடலில் அமாவாசை நாட்களில் ஏராளமானோர் கூடுவார்கள். அப்போது இந்த கடற்புற்களால் கடலுக்குள் இறங்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும் கடற்கரை அழகும் பொலிவில்லாமல் காட்சியளிக்கிறது. கடற்புற்களை அகற்றி கடற்கரையை சுத்தபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ