உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாத்தமங்கலம் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்

சாத்தமங்கலம் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து பெரிய கண்மாய் பாலம் வழியாக இளையான்குடி செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டில் சாத்தமங்கலம் விலக்கிலிருந்து, கூட்டாம்புளி, சாத்தமங்கலம், சீனாங்குடி, சேர்த்திடல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்வதற்கு ரோடு உள்ளது. இந்த ரோடு பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததன் காரணமாக, ரோட்டில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், சாத்தமங்கலம் விலக்கு ரோட்டில் இருந்து, கூட்டம்புளி வரை ரோட்டோரத்தில் மண்ணரிப்பு ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் மேலும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோட்டை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ