உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருப்பாலைக்குடி அரசு பள்ளிக்கு வாட்ச்மேன் நியமிக்க வலியுறுத்தல்

திருப்பாலைக்குடி அரசு பள்ளிக்கு வாட்ச்மேன் நியமிக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம்: திருப்பாலைக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு வாட்ச்மேன் நியமிக்க பெற்றோர் வலியுறுத்தினர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் திருப்பாலைக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் மாணவர்களுக்கான கணினிகள், அலுவலக உபகரணங்கள், ஆய்வுக்கூட சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களும், ஆவணங்களும் உள்ளன. கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி பள்ளி இருப்பதால் அப்பகுதியில் இரவில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பள்ளியில் உள்ள பொருட்கள் திருடு போகும் நிலை உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு இரவு காவலரை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர். அப்பகுதியைச் சேர்ந்த டூயட் பாபு கூறுகையில், இரவு காவலர்கள் பள்ளியில் இல்லாததால் பள்ளி வளாகத்தில் சமூகவிரோதிகள் நடமாட்டம் உள்ளது. இதனால் பள்ளியில் உள்ள பொருள்களும் திருடு போவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ