உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மழைக்காலத்தில் மின் விபத்து தடுப்புவழிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தல்

மழைக்காலத்தில் மின் விபத்து தடுப்புவழிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தல்

ராமநாதபுரம்: மழைக்காலம் என்பதால் ஈரமான கைகளுடன் சுவிட்சுகள், பிளக்குகள், மின்சார ஒயர்களை தொடக்கூடாது என மின்வாரியத்தினர் வலியுறுத்தியுள்ளனர். ராமநாதபுரம் மேற்பார்வை பொறியாளர் வெண்ணிலா கூறியிருப்பதாவது: மின்கம்பிகளுக்கு அருகேயுள்ள மரக்கிளைகளை வெட்டும் போது அருகேயுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். ஈரமான கைகளுடன் சுவிட்சுகள், பிளக்குகள், மின்சார ஒயர்களை தொடக்கூடாது. பிரிட்ஜ், கிரைண்டர் ஆகிவற்றிற்கு 3 பின் பிளக்குகளை பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற மின்விபத்து தடுப்பு வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். மழைக் காலத்தில் தடையின்றி மின்வினியோகம் வழங்க பணியாளர்கள் தயாராக உள்ளனர். தேவையான தளவாட பொருட்கள் உள்ளன. ஒவ்வொரு உபகோட்ட அளவில் பொறுப்பாளர்களாக பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சுதாகர் (பொ) ( 94458 52662): ராமநாதபுரம் நகர், கீழக்கரை, தேவிப்பட்டினம், ரெகுநாதபுரம் சுற்றியுள்ள பகுதிகள். குமாரவேல் (94458 53324): ராமநாதபுரம் கிராமம், உச்சிப்புளி, பனைக்குளம், மண்டபம், ராமேஸ்வரம், உத்தரகோசமங்கை சுற்றியுள்ள பகுதிகள். சித்தி விநாயக மூர்த்தி (94458 52661): திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர் தொண்டி, ஆனந்துார், நகரிகாத்தான் சுற்றியுள்ள பகுதிகள். மாலதி(பொ) (94458 52663): பரமக்குடி நகர், எமனேஸ்வரம், சிட்கோ சுற்றியுள்ள பகுதிகள். செந்தில்குமார் (94458 53014): பரமக்குடி கிராமங்கள், சத்திரக்குடி, பார்த்திபனுார், நயினார்கோயில் சுற்றியுள்ள பகுதிகள். செந்தில்குமார் (பொ) (94458 53015): கமுதி டவுன், கிராமம், அபிராமம், பெருநாழி சுற்றியுள்ள பகுதிகள். மாலதி (94458 53016): முதுகுளத்துார், கடலாடி, வாலிநோக்கம், சிக்கல், சாயல்குடி சுற்றியுள்ள பகுதிகள். பொதுமக்கள் மின்வினியோக பிரச்னைகளுக்கு தங்கள் பகுதிகளுக்குரிய அதிகாரிகளை அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.--------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ