உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவர் விடுதியில் தேங்கிய மழை நீரை அகற்ற வலியுறுத்தல்

மாணவர் விடுதியில் தேங்கிய மழை நீரை அகற்ற வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி 11-வது வார்டு அரசு மாணவர்கள் விடுதி, பரமக்குடி ரோடு செட்டியமடை தெற்கு பகுதி மற்றும் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் 10 நாட்களுக்கும் மேலாக மழை நீர் சூழ்ந்துள்ளது.தாழ்வான பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்குள் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்போர் சிரமப்படுகின்றனர். விடுதி மாணவர்களும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி குடியிருப்போர் வலியுறுத்தினர்.வார்டு கவுன்சிலர் வைரவன் கூறுகையில், தாழ்வான பகுதி என்பதால் குடியிருப்பு வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி இருந்தது.தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் விதமாக தற்போது ஆயில் மோட்டார் வைத்து தண்ணீரை பேரூராட்சி ஊழியர்கள் வெளியேற்றி வருகின்றனர். விரைவில் அப்பகுதிக்கு தீர்வு ஏற்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ