மேலும் செய்திகள்
பரமக்குடி பகுதியில் முளைப்பாரி விழா
27-Sep-2024
நவராத்திரி நிறைவு பரமக்குடி: பரமக்குடி பெருமாள், சிவன், முருகன் கோயில்களில் நவராத்திரி விழாவையொட்டி வன்னிகா சூரன் வதம் நடந்தது.பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கடந்த 9 நாட்களாக நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. நேற்று மாலை 5:00 மணிக்கு பெருமாள் குதிரை வாகனத்தில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளினார். இதே போல் ஈஸ்வரன் கோயிலில் விசாலாட்சி அம்பிகை தினமும் பல்வேறு அலங்காரங்களில் அருள் பாலித்தார்.தொடர்ந்து நேற்று குதிரை வாகனத்தில் அலங்காரமாகி பெருமாள் கோயில் படித்துறையில் எழுந்தருளினார். அப்போது பெருமாள் மற்றும் விசாலாட்சி அம்மன் தனித்தனியாக வன்னிகா சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள முருகன் கோயிலில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வன்னிகா சூரன் வதம் நடந்தது. மேலும் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் சுவாமி குதிரை வாகனத்தில் அலங்காரமாகி நேற்று காலை அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
27-Sep-2024