ரூ.5,000 லஞ்சம் வி.ஏ.ஓ., கைது
ராமநாதபுரம்: பட்டா மாறுதல் செய்ய, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார். ராமநாதபுரத்தை சேர்ந்த நபர், நிலப்பட்டா பெயர் மாறுதல் செய்ய, விண்ணப்பித்திருந்தார். இதற்காக, புதுமடம் வி.ஏ.ஓ., அனுராஜ், 36, என்பவரை அணுகியுள்ளார். அவர், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து, அந்த நபர், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் அறிவுரையின்படி, அந்த நபர், நேற்று வி.ஏ.ஓ., அலுவலகத்தில் அனுராஜிடம், 5,000 ரூபாய் கொடுத்துள்ளார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், அனுராஜை கைது செய்தனர்.