மேலும் செய்திகள்
தர்மர் பிறப்பு விழா கொண்டாட்டம்
01-Aug-2025
ஆர்.எஸ்.மங்கலம் : சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஆர்.எஸ். மங்கலம் அருகேயுள்ள உப்பூர் விநாயகர் கோயிலில் வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. உப்பூரில் விநாயகர் கோயிலில் மூலவர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில் கருவறை அமையப்பெற்றுள்ளதால் வெயிலுகந்த விநாயகர் என அழைக்கப்படு கிறார். இக்கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நேற்று மாலை விக்னேஸ்வரர், வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம், அலங்காரத்தில் தீபாராதனைகள் நடந்தது. பத்து நாட்கள் நடைபெறும் சதுர்த்தி விழாவின் துவக்கமாக, இன்று காலை 9:30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்று விழா துவங்குகிறது. விழாவின் தொடர்ச்சியாக, எட்டாம் நாளான ஆக.25 ல் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. ஆக.27 ல் நடைபெறும் சதுர்த்தி தீர்த்த வாரியுடன் விழா நிறைவடைகிறது.
01-Aug-2025