உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாழவந்த அம்மன்  கோயில் புரட்டாசி பொங்கல் விழா 

வாழவந்த அம்மன்  கோயில் புரட்டாசி பொங்கல் விழா 

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் 300 ஆண்டுகள் பழமையான வாழவந்த அம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா நடந்தது.சுயம்புவாக தோன்றி வேண்டுபவர்களுக்கு வேண்டிய வரங்களை தரும் வாழவந்த அம்மன் கோயில் பொங்கல் விழாவில் அம்மனுக்கு திரவியப் பொடி, மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 11 வகை அபிேஷகங்கள் நடந்தது.நுாறுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபாடு செய்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மழை வேண்டியும், மக்கள் நலமுடன் வாழவும் சிறப்பு பூஜைகள் நடந்தது.வாலாந்தரவை, தேவர் நகர், அண்ணாநகர், அம்மன் கோவில், அழகன்குளம், வைரவன் கோவில், வளையனேந்தல, ராஜவள்ளி, திருப்புல்லாணி உட்பட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் அம்மனை வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை