கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கமுதி: கமுதி தாலுகா அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சங்க மாவட்ட பொருளாளர் பால்ராமர் தலைமை வகித்தார். அப்போது பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசாணை எண் 33 திருத்தம் செய்து கிராம உதவியாளர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவும், ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்கள் சிபிஎஸ் திருத்தம் செய்து இறுதி தொகையை உடனடியாக வழங்கவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கமுதி வட்டத் தலைவர் அரியப்பன், செயலாளர் குமரேச பாண்டியன், பொருளாளர் இப்ராஹிம் கலீல் கலந்து கொண்டனர்.