மேலும் செய்திகள்
டி.ஐ.ஜி., பொறுப்பேற்பு
01-Apr-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அடுத்த குயவனேந்தல் கிராம தலைவர் காசிலிங்கம் (65) என்பவர் நேற்று மாலை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றநிலையில், இரவு வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் குயவனேந்தல் கிராமம் முழுவதும் தேடியுள்ளனர்.அப்போது குயவனேந்தல் முனியப்ப சாமி கோவில் அருகே காட்டுப் பகுதியில் காசிலிங்கம் மர்ம நபர்களால் குத்திக்கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் கிடந்தார். இதனையடுத்து திருப்பாலைக்குடி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
01-Apr-2025