உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காவிரி குடிநீர் வராததால் கிராமங்களில் மக்கள் சிரமம்

காவிரி குடிநீர் வராததால் கிராமங்களில் மக்கள் சிரமம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே அப்பனேந்தல், நாகேந்தல் கிராமங்களில் ஒரு மாதத்திற்கும் மேலாக காவிரி குடிநீர் வராததால் மக்கள் சிரமப் படுகின்றனர். அப்பனேந்தல், நாகேந்தல் கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு ஒரு மாதத்திற்கு மேலாக காவிரி குடிநீர் வரவில்லை. இதனால் டிராக்டர் தண்ணீரை குடம் ரூ.15 விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நட வடிக்கை எடுக்கவில்லை. டிராக்டர் வராத போது 3 கி.மீ., நடந்து தள்ளுவண்டியில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர். கிராமத்தில் உள்ள போர்வெல் பரா மரிக்கப்படாததால் அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ