நகராட்சியில் இணைக்க, பேரூராட்சியாக தரம் உயர்த்துவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சியுடன் அச்சுந்தன்வயல் ஊராட்சி நொச்சிவயலை இணைக்க கூடாது. ஏர்வாடி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்துவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அச்சுந்தன்வயல் ஊராட்சியை சேர்ந்த நொச்சிவயல் கிராம தலைவர் கருப்பையா, துணை தலைவர் முத்துக்குமார் முன்னிலையில் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் நெல் விவசாயம் நடக்கிறது. அனைவரும் மகாத்மா காந்தியின் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்து பயனடைகின்றனர்.ராமநாதபுரம் நகராட்சியுடன் இணைத்தால் வரி உயர்ந்து விடும். நுாறு நாள் திட்டம் பறிபோய் விடும். எனவே நொச்சிவயலை ராமநாதபுரம் நகராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தினர்.இதே போல கடலாடி ஒனறியம் ஏர்வாடி ஊராட்சி மக்கள் மனு அளித்தனர். இதில் நுாறு நாள் வேலையை நம்பி ஆதரவற்ற பெண்கள், முதியவர்கள் பலர் உள்ளனர். எனவே ஏர்வாடியை பேரூராட்சியாக தரம் உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.