மேலும் செய்திகள்
விஸ்வகர்மா ஜெயந்தி விழா சுவாமி ஊர்வலம்
19-Sep-2025
சுயம்பு நாகர் ஆலயத்தில் விஸ்வபிரம்ம ஜெயந்தி விழா
18-Sep-2025
கீழக்கரை : கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி செல்லும் வழியில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் வேல் கொண்டு ஸ்தாபிதம் செய்யப்பட்ட செந்தில் முருகன் கோயில் உள்ளது. இதன் அருகே உள்ள அலங்கார மண்டபத்தில் தேவலோக சிற்பியாக திகழும் விஸ்வகர்மாவிற்கு தனி சன்னதி உள்ளது. நேற்று காலை மூலவர் செந்தில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பூஜைகளை உத்தரகோசமங்கை நாகராஜன் பட்டர் செய்தார். தனி சன்னதி கோயிலாக உள்ள விஸ்வகர்மாவிற்கு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜிக்கப்பட்டது. சிவாச்சாரியார்களால் கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் விஸ்வகர்மாவை வணங்கி சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை செந்தில் முருகன் கோயில் நிர்வாகத் தலைவர் விஜயகுமார், கீழக்கரை மனுமயா இளைஞர் கொல்தச்சு தொழிலாளர்கள் சங்கத் தலைவர் தேவேந்திரன், தலைமை பொறுப்பாளர் வேலன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு தேவ தட்சனாகிய விஸ்வகர்மா தேவலோகத்தின் கட்டடக் கலைஞர் மற்றும் கருவிகளை உருவாக்குவது குறித்தும், மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு புதிய நகரத்தை நிர்மாணித்ததில் விஸ்வகர்மாவின் பங்கு பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. விஸ்வகர்மா சமூகத்தினர் ஐந்து முக்கிய தொழில்களில் ஈடுபடுகின்றனர். இரும்பு, மரவேலை, சிற்ப வேலை, பாத்திர வேலை மற்றும் தங்க நகை உள்ளிட்ட பணிகளாகும்.
19-Sep-2025
18-Sep-2025