உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கோயில் இலவச தரிசன வழியில் வசதிகளின்றி பக்தர்கள் அவதி விஸ்வ ஹிந்து பரிஷத் புகார்

ராமேஸ்வரம் கோயில் இலவச தரிசன வழியில் வசதிகளின்றி பக்தர்கள் அவதி விஸ்வ ஹிந்து பரிஷத் புகார்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இலவச தரிசனத்திற்கு செல்லும் வழியில் போதுமான அடிப்படை வசதியின்றி பக்தர்கள் சிரமப்படு கின்றனர் என விஸ்வ ஹிந்து பரிஷத் புகார் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மண்டல அமைப்பாளர் சரவணன் தலைமையில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியுள்ளதாவது: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த ஆந்திரமாநில பக்தர்கள் இலவச தரிசன வழியில் செல்லும் போது பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்ததாக சொல் கின்றனர். கட்டண தரிசன வழியில் செல்ல வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இலவச வழியில் பக்தர்கள் நீண்ட துாரம் நடக்க வைத்து, மேலே ஏறவைத்து பக்தர்களை சிரமப்படுத்துகின்றனர். குடிநீர் வசதி, காற்றோட்டம் என எதுவும் செய்து தரவில்லை. எனவே பக்தர் இறப்பு குறித்து முழுவிசாரணை செய்து, அந்த பெண்ணிற்கு ஹிந்துசமய அறநிலையத்துறை ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
நவ 11, 2025 12:29

ஒண்ணு எல்லோருக்கும் காசு வெச்சு உருவுங்க. இல்லேன்னா எல்லாரையும் ஃப்ரீயா அனுமதியுங்க...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை