உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிழக்கு கடற்கரைச் சாலையில்  காட்சிப்பொருளான சிக்னல்கள்; வாகனங்கள் போக்குவரத்திற்கு சிக்கல்

கிழக்கு கடற்கரைச் சாலையில்  காட்சிப்பொருளான சிக்னல்கள்; வாகனங்கள் போக்குவரத்திற்கு சிக்கல்

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் 24 மணி நேரமும் போக்குவரத்து மிகுந்த கிழக்கு கடற்கரைச் சாலை ரவுண்டானாக்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வைத்துள்ள சிக்னல் விளக்குகள் செயல்படாமல் காட்சிப்பொருளாக உள்ளதால் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலா இடங்களான தேவிபட்டினம் நவபாஷாணம் கோயில், ராமேஸ்வரம் கோயில், திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி, ஏர்வாடி தர்ஹா மற்றும் கடற்கரை பகுதிகளுக்கும் செல்லும் மையப்பகுதியாக மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுரை ரோடு, ராமேஸ்வரம் ரோடு, கிழக்குகடற்கரை சாலை ஆகிய இடங்களில் 24 மணிநேரமும் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலை அச்சுந்தன்வயல், தேவிபட்டினம், மதுரை ரோடு, பட்டணம்காத்தான் உள்ளிட்ட மூன்று, நான்கு ரோடு பிரிவு ரவுண்டானாக்களில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை பயன்படுத்தப்படாமல் பல மாதங்களாக காட்சிப்பொருளாகவே உள்ளன. மேலும் வேகத்தடைகளும் அளவிற்கு அதிக உயரமாக உள்ளன. இதனால் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது. இந்த இடங்களில் விபத்து கண்காணிப்பு சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதுபோன்று சிக்னல்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர எஸ்.பி., சந்தீஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !