மேலும் செய்திகள்
காவிரி குடிநீர் இன்றும் நாளையும் நிறுத்தம்
08-Jul-2025
ராமநாதபுரம்: தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் தங்களது விபரங்களுடன் ராமநாதபுரம் மாவட்ட முகவரிப்பட்டியலில் இணைப்பதற்கு விண்ணப்பிக்கலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் புதிய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை நேரில் அணுகி மாவட்ட முகவரிப்பட்டியலில் இணைப்பதற்கு ஆக.,31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதன்படி நுகர்வோர் நலன்களை மேம்படுத்தும், பாதுகாக்கும் நிறுவனமாக இருக்க வேண்டும். அரசியல் சார்பற்றதாகவும், வணிக நோக்கமற்றதாகவும் இருக்க வேண்டும். 20 சதவீதம் உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும். கவுன்சில், ஆணையம், மன்றம் என இருத்தல் கூடாது. ஜாதி, சமயம், நிறம், பாலினம் அல்லது மதம் என எந்த வேறுபாடும் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அரசு விதித்துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
08-Jul-2025