உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு நிதி வீணடிப்பு

அரசு நிதி வீணடிப்பு

l ராமநாதபுரத்தில் வீணாகும் மீன்பிடி உபகரணங்கள்l மீனவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் இல்லைமீனவர்களுக்கு தேவையான உதவிகளையும், மானியங்களையும் பெற்றுத் தந்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி காட்ட வேண்டிய பணியில் மீன்வளத் துறை உள்ளது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்கப்படும் நவீன தொழில் நுட்பக் கருவிகளை மீனவர்களுக்கு வழங்கி செயல் விளக்க பயிற்சிகளை அளிக்காததால் கடலுக்குள் மீன் வளர்க்கும் திட்டம் கேள்விக்குறியாகி உள்ளது.திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு ஊராட்சி சண்முகவேல் பட்டினம் கடற்கரையோர பகுதிகளில் 7 மீ., அகலத்தில் 2 மீ., உயரத்தில் வட்ட வடிவ தொட்டி அமைத்து அவற்றில் மீன் வளர்த்து பயன்படுத்துவதற்காக மீனவர்களுக்கு வழங்கியுள்ளனர்.சண்முகவேல் பட்டினத்தில் 20க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் உள்ளன. நாட்டுப் படகு மீனவர்களுக்கு கடலுக்குள் ஒரு நாட்டிக்கல் கடல் மைல் தொலைவிற்குள் தொட்டி முறையில் மீன் வளர்க்கும் தொழில் நுட்பங்களை அளிக்காததால் பல லட்சம் மதிப்பிலான 5க்கும் மேற்பட்ட தொட்டி வலைகள் கடலோரத்தில் பயன்பாடின்றி வீணாகின்றன.மீனவர்கள் கூறியதாவது: மீன்வளத் துறை சார்பில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு அவை மானிய அடிப்படையில் மீனவர்களுக்கு வழங்கப்படுகிறது. கடலுக்குள் குறிப்பிட்ட ஆழத்தில் தொட்டி வடிவ மீன் வளர்க்கும் முறைக்காக வழங்கப்பட்ட மீன் பிடி உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்ற முறையான வழிகாட்டுதலை மீன்வளத் துறை வழங்கவில்லை.இதற்காக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவில்லை. இதனால் இத்திட்டத்தின் நோக்கம் கேள்விக்குறியாகி அரசு நிதி வீணடிப்பு செய்யப்படுகிறது. எனவே ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறையினர் அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க உரிய முறையில் வழிகாட்டுதலையும், மானிய விபரங்களையும் தெரிவித்து கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை