வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திருடன் திருடிகொண்டான் போலீஸ் தேடுகிறான் ஏட்டு எழுதிகொண்டான் திருட்டு திராவிடன் பிழைத்துக்கொண்டான் தமிழன் ஏமாந்து நின்றான்.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் திடக்கழிவு நீர் கலந்ததால் துர்நாற்றம் வீசியது. இதனால் ரூ. 57 கோடியில் அமைத்த பாதாள சாக்கடை திட்டம் வீணாகியது. ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுகின்றனர். இத்தீர்த்தம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதிகள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசியது. இதனால் தீர்த்தத்தின் பெருமைக்கு களங்கம் ஏற்படுத்தினர். இதனை தவிர்க்க 2021ல் ரூ.57 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் அமைத்து இரு மாதங்களுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்தது. இத்திட்டம் அமலுக்கு வந்த பின் அக்னி தீர்த்தத்தில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் என ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்தது. ஆனால் இத்திட்டம் நடைமுறைக்கு வந்த பின் கழிவுநீர் கூடுதலாகவே கலக்கிறது. நேற்று அக்னி தீர்த்த கரை அருகே உள்ள பாதாள சாக்கடை தொட்டியில் இருந்து வெள்ளம் போல் வெளியேறிய திடக் கழிவுநீர் நேரடியாக அக்னி தீர்த்தத்தில் கலந்து அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதனால் பக்தர்கள் அருவருப்புடன் நீராடியும், பலர் நீராடாமல் வேதனையுடன் திரும்பி சென்றனர். அக்னி தீர்த்தம் புனிதம் காக்க ரூ. 57 கோடியில் அமைத்த பாதாள சாக்கடை திட்டம் வீணாகிப் போனதே என பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர் ராமமூர்த்தி கூறுகையில், கோயில் புனிதம், ஆன்மிக மரபுகளை சீர்குலைக்க தமிழக அரசு ஒவ்வொரு நாளும் திட்டமிடுவதால் தான், ராமேஸ்வரம் பாதாள சாக்கடை திட்டப் பணி தரமின்றி அமைத்து அக்னி தீர்த்தத்தில் திடக் கழிவுநீர் கலக்கிறது. இது ஒருமுறை அல்ல. மாதத்தில் பலமுறை திடக்கழிவு நீர் கலந்துள்ளது. இதனை தடுத்து தீர்த்தத்தை பாதுகாக்க அதிகாரிகள் முன்வராதது தமிழக அரசின் ஹிந்து விரோத போக்கை காட்டுகிறது. இதற்கு தீர்வு காணாவிடில் சட்ட ரீதியாக போராட்டம் நடத்துவோம் என்றார்.
திருடன் திருடிகொண்டான் போலீஸ் தேடுகிறான் ஏட்டு எழுதிகொண்டான் திருட்டு திராவிடன் பிழைத்துக்கொண்டான் தமிழன் ஏமாந்து நின்றான்.