உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாட்டர் ஆப்பிள் விலை சரிவு கிலோ ரூ.80க்கு விற்பனை

வாட்டர் ஆப்பிள் விலை சரிவு கிலோ ரூ.80க்கு விற்பனை

ராமநாதபுரம்:மலைப்பிரதேசங்களில் விளைவிக்கப்படும் வாட்டர் ஆப்பிள் பழம் வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிவடைந்து ராமநாதபுரத்தில் கிலோ ரூ.80 முதல் ரூ.100க்கு தரத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது.குற்றாலம், ஏற்காடு, மூணாறு, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வாட்டர் ஆப்பிள் விளைவிக்கப்படுகிறது. பொதுவாக மார்ச்சில் சீசன் துவங்கிய போதும் மே, ஜூன் மாதங்களில் இதன் விளைச்சல் அதிகரிக்கும். வாட்டர் ஆப்பிள் பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, புரதங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் கோடை என்பதால் இப்பழங்களை குற்றாலத்தில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து ராமநாதபுரத்தில் பழத்தின் அளவு, தரத்திற்கு ஏற்றவாறு கிலோ ரூ.80 முதல் ரூ.100க்கு விற்கப்படுகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர். இதுவே சீசன் இல்லாத மாதங்களில் அதிகபட்சமாக கிலோ ரூ.300 வரை விற்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை