மேலும் செய்திகள்
மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
05-Apr-2025
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் தேங்கியுள்ள தண்ணீரை பயன்படுத்தி பாசன விவசாயிகள் கோடை சாகுபடியாக நெல், பருத்தி, உளுந்து உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர்.இந்த மாதம் துவக்கத்தில் பெரிய கண்மாயில் 2.5 அடி தண்ணீர் இருந்தது. இந்நிலையில் கோடை விவசாய பயன்பாடு மற்றும் தொடர்ந்து சுட்டெரித்து வரும் கடும் வெயிலின் தாக்கத்தால் 1.5 அடி தண்ணீர் மட்டுமே தற்போது தேங்கியுள்ளது. மேலும் தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வருவதால் நாளுக்கு நாள் பெரிய கண்மாயில் நீர்மட்டம் குறைந்த வண்ணம் உள்ளது.இதனால், பாசன பகுதிகளில் கோடை விவசாயம் செய்துள்ள விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.
05-Apr-2025