ராமேஸ்வரம் விடுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு
ராமேஸ்வரம்::போதுமான மழை இல்லாததால் ராமேஸ்வரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விடுதிகளில் டேங்கர் லாரி தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். 5 ஆண்டுகளுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் 100 தங்கும் விடுதிகள் இருந்தன. தற்போது 200 ஆக உயர்ந்து உள்ளது. தண்ணீர் தேவையும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மார்ச் முதல் தற்போது வரை கோடை மழை பெய்யவில்லை. நிலத்தடிநீர் வற்றிப் போனதால் விடுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. டேங்கர் லாரிகளில் (8 ஆயிரம் லி., ) ரூ. 700 வீதம் தினமும் 2 லாரிகளில் தண்ணீர் வாங்குகின்றனர். மழை பெய்யாவிடில் நிலத்தடி நீர் பாதாளத்திற்கு செல்லும். இதனால் மக்களின் தண்ணீர் தேவைக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.