உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வேளாண் நவீனமயமாக்கல் திட்டத்தில் காருகுடி கிராமத்திற்கு தண்ணீர் தொட்டி 

வேளாண் நவீனமயமாக்கல் திட்டத்தில் காருகுடி கிராமத்திற்கு தண்ணீர் தொட்டி 

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் வேளாண்மைத்துறை சார்பில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், காருகுடி மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்டு தண்ணீர் தொட்டி, எல்.இ.டி டிவி., வழங்கப்பட்டது.கீழ்வைகை உப வடிநிலப்பகுதி பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் வேளாண் துணை இயக்குநர்கள் பாஸ்கரமணியன், அமர்லால், ராமநாதபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் (பொ) அம்பேத்குமார், வட்டார வேளாண் அலுவலர் தமிழ் ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினர். உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஊராட்சி அலுவலகம் அருகில் விவசாயிகளுக்கு தண்ணீர் தொட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்த எல்.இ.டி., டி.வி., வழங்கப்பட்டது. விவசாயிகள் இருக்கின்ற நீரை பயன்படுத்தி 2ம் போக சாகுபடியாக உளுந்து, எள், பருத்தி பயிரிட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை