உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பரமக்குடியில் கேந்திரிய வித்யாலயா வேண்டும்: மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்

 பரமக்குடியில் கேந்திரிய வித்யாலயா வேண்டும்: மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்

பரமக்குடி: பரமக்குடியில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி துவங்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் தர்மர் எம்.பி., வலியுறுத்தி மனு அளித்துள்ளார். பரமக்குடி பகுதிகளில் மத்திய அரசு அலுவலகங்கள், ரயில்வே, தபால் துறை, பொதுத்துறை வங்கிகள் மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த பணியாளர்கள் வசிக்கின்றனர். ஆகவே குழந்தைகளின் தரமான கல்விக்கு கேந்திர வித்யாலயா பள்ளி அவசியமாகிறது. தற்போது கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிப்பதற்கு மாணவர்கள் மதுரை அல்லது ராமநாதபுரத்தை கடந்து நீண்ட துாரம் பயணிக் கின்றனர். பெண் குழந்தைகள் உட்பட மாணவர்களின் பாதுகாப்பில் சிரமம் ஏற்படுகிறது. பரமக்குடியில் பள்ளி அமைப்பதற்கு போதுமான நிலம் உள்ளூரிலேயே தயார் நிலையில் இருக்கிறது. இப்பள்ளியால் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களும் சர்வதேச தரத்திலான கல்வியை பெற முடியும் என தெரிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போதும் ஏற்கனவே பேசி உள்ளார். தற்போது பள்ளி துவங்குவது குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் மனு அளித்துள்ளார். இது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக தர்மர் எம்.பி., தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை