உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி நகராட்சி பகுதியில் ரூ.13.50 கோடியில் வாரச்சந்தை

பரமக்குடி நகராட்சி பகுதியில் ரூ.13.50 கோடியில் வாரச்சந்தை

பரமக்குடி: பரமக்குடி நகராட்சியில் நவீன வாரச்சந்தை வளாகம் ரூ.13.50 கோடியில் கட்டப்பட்டு வருகிறது.பரமக்குடி நகராட்சியில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தினமும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு பணி நிமித்தமாக வந்து செல்கின்றனர். இங்குள்ள சந்தை வளாகத்தில் வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் கால்நடை மற்றும் காய்கறி சந்தை கூடுகிறது.இந்நிலையில் சந்தை வளாகத்தில் கூரை வசதியின்றி வியாபாரிகள், மக்கள் மழை, வெயிலால் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டி வந்தது. இதையடுத்து நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2023--24 ல் 13 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் பிரம்மாண்ட கூரையுடன் கூடிய கடைகள் கட்டப்பட்டு வருகிறது.இப்பணிகளை நகராட்சி தலைவர் சேது கருணாநிதி பார்வையிட்டு விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டார். உடன் நகராட்சி கமிஷனர் முத்துச்சாமி, இன்ஜினியர் செல்வராணி, உதவி இன்ஜினியர் சுரேஷ் இருந்தனர். இதன் மூலம் வரும் நாட்களில் நவீன சந்தை வளாகத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எந்த தடையும் இன்றி பொருட்களை வாங்கிச் செல்ல ஏதுவாக அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை