மேலும் செய்திகள்
தெருமுனை பிரசாரம்
22-Jun-2025
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம் அரியான் கோட்டையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பெறப்பட்ட 112 மனுக்களில் 45 பேர் தேர்வு செய்யப்பட்டு ஒருவருக்கு தையல் இயந்திரமும், ஒருவருக்கு ஈமச்சடங்கு நிவாரணத் தொகையும், 13 பேருக்கு மகளிர் சுய உதவி குழு கடன் உட்பட 9.12 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில் கோட்டாட்சியர் ராஜ மனோகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பாஸ்கர மணியன், மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் கிருஷ்ணகுமாரி, ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் அமர்நாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
22-Jun-2025