உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திறப்பு விழா எப்போது

திறப்பு விழா எப்போது

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சி வேதக்காரன் வலசையில் ஆறு மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழாவிற்காக காத்து இருக்கிறது. தினைக்குளம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள ரேஷன் கடைக்கு ரேஷன் கார்டுதாரர்கள் 2 கி.மீ.,க்கு இலவச அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு வாடகை ஆட்டோ பிடித்து வாங்கி வருகின்றனர். எனவே புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று வேதக்காரன் வலசை யில் ரூ.13 லட்சத்தில் ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. வேதக்காரன்வலசை பொதுமக்கள் கூறிய தாவது: வடக்கு மொத்தி வலசை, காவல்காரன் வலசை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 450 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ள நிலையில் இங்கு உள்ள ரேஷன் கடை திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்ட நிலையில் இதுவரை திறப்பு விழா நடக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை