உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சல்லடை போட்டும் கிடைக்காத ரூ.6.25 கோடி தங்கம் எங்கே?

சல்லடை போட்டும் கிடைக்காத ரூ.6.25 கோடி தங்கம் எங்கே?

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபம் வேதாளை கடற்கரைக்கு, பிப்., 23ல் இலங்கையில் இருந்து பைபர் கிளாஸ் படகில் 6.25 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ தங்கக்கட்டிகளை மூன்று பேர் கடத்தி வந்தனர். அப்போது இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பலை கண்டதும் கடத்தல்காரர்கள் தங்கக் கட்டிகளை கடலில் வீசிவிட்டு தப்ப முயன்றனர்.அதில் ஒருவர் கடலில் குதித்து தப்பிச் சென்றார். மற்ற இருவரை இந்திய வீரர்கள் பிடித்து விசாரித்தனர். அவர்கள் கூறியதன்படி, கடல் வீசியதாக கூறப்பட்ட தங்கக்கட்டிகளை 4 நாட்களாக இந்திய வீரர்கள் ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் கடலுக்கு அடியில் சல்லடை போட்டு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் செவ்வாய்க்கிழமை தேடும் பணியை கைவிட்டனர்.இந்நிலையில், 6.25 கோடி ரூபாய் மதிப்பு தங்கக்கட்டிகளை தப்பிச்சென்றவர் கொண்டு சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து, மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ