உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிணறு தோண்டிய போது மண் சரிந்து தொழிலாளி பலி

கிணறு தோண்டிய போது மண் சரிந்து தொழிலாளி பலி

திருவாடானை : திருவாடானை அருகே கிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்தில் தொழிலாளி புதைந்து பலியானார்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எட்டுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் 64. இவரது தோட்டத்தில் நேற்று காலை கிணறு தோண்டும் பணி நடந்தது. அப்போது நிலமழகிய மங்கலம் கிராமத்தை சேர்ந்த வீரகுமார் 54, சித்தம்பூரணி அருளானந்து 38, இருவரும் கிணற்றில் இறங்கி மண்வெட்டியால் வெட்டி மணல் அள்ளினர்.அந்த மணலை சித்தம்பூரணி தாஸ் 45, ராஜ்குமார் 26, ஆகிய இருவரும் கூடையில் வாங்கி கிணற்றின் ஓரமாக கொட்டினர். அப்போது திடீரென மண் சரிந்து உள்ளே விழுந்தது. இதில் வீரக்குமார் மணலுக்குள் சிக்கி மூச்சுத்திணறி பலியானார். அருளானந்து காயமடைந்தார். திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையில் வீரர்கள் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் மணலை அள்ளி வீரகுமார் உடலை மீட்டனர். வீரகுமாருக்கு மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ