இறந்த கணவர் உடலை மருத்துவ கல்லுாரிக்கு வழங்கிய மனைவி
ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி தபால் நிலையம் அருகே வசித்து வந்தவர் மாரிமுத்து 74, கூலி தொழிலாளி. உடல் நலக்குறைவால் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இறந்தார்.அவரது கண்களை தானமாக வழங்கிய மனைவி கிருஷ்ணவேணி 70, உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு வழங்கினார்.கிருஷ்ணவேணி கூறியதாவது: எனது கணவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மண்ணுக்குள் வீணாகும் உடலை மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் கல்வி கற்பதற்காக கேட்டனர். கண்களை பார்வையற்றவர்களுக்காக கேட்டனர். தானமாக வழங்கினேன் என்றார்.