உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதி அருகே பருத்தி செடிகளை சேதப்படுத்திய காட்டுப்பன்றி

கமுதி அருகே பருத்தி செடிகளை சேதப்படுத்திய காட்டுப்பன்றி

கமுதி: -கமுதி அருகே செங்கோட்டைபட்டி கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி செடிகளை காட்டுப்பன்றி சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.செங்கோட்டைபட்டி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக சோளம்,பருத்தி உள்ளிட்ட சிறுதானிய பயிர்கள் பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர்.ஊருணி, கண்மாயில் தேக்கி வைத்த தண்ணீர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வந்தனர். தற்போது தண்ணீர் வற்றியதால் வேறுவழியின்றி கூடுதல் பணம் செலவு செய்து போர்வெல் தண்ணீரை விலைக்கு வாங்கி பருத்தி செடிக்கு பாய்ச்சி வந்தனர்.செடிகள் நன்கு வளர்ச்சி அடைந்து பருத்தி காய்கள் வெடிக்க தொடங்கியது. இந்நிலையில் பருத்தி செடிகளை காட்டுப்பன்றி சேதப்படுத்தியது.ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்தும் வீணாகியுள்ளது. காட்டுப்பன்றி தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். வனத்துறையினர் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ