உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சின்னக்கீரமங்கலம் விலக்கில் பேரிகார்டு அமைக்கப்படுமா

சின்னக்கீரமங்கலம் விலக்கில் பேரிகார்டு அமைக்கப்படுமா

திருவாடானை: திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சின்னக்கீரமங்கலம் விலக்கு ரோட்டில் விபத்துகளை தடுக்கும் வகையில் பேரிகார்டு அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையில் ராமநாதபுரம் செல்லும் ரோட்டில் சின்னக்கீரமங்கலத்திற்கு செல்லும் விலக்கு ரோடு உள்ளது. போக்குவரத்து அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சின்னக்கீரமங்கலம் ரோட்டை எளிதில் கடக்க முடியவில்லை.தாறுமாறாக செல்லும் வாகனங்களால் அந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. பாதசாரிகளும் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த அந்த இடத்தில் பேரிகார்டு அமைத்து வாகனங்கள் செல்வதை ஒழுங்குபடுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை