உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மங்களக்குடியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படுமா

மங்களக்குடியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படுமா

திருவாடானை: மங்களக்குடியில் புறக்காவல்நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.திருவாடானை சப்-டிவிஷனில் திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி ஆகிய போலீஸ்ஸ்டேஷன்கள் உள்ளன. இப்பகுதியில் மணல் கடத்தல், விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி திருவாடானை போலீஸ்ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களை பிரித்து மங்களக்குடியிலும், ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ்ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களை பிரித்து ஆனந்துாரிலும் புறக்காவல் நிலையம் திறக்க முடிவு செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு ஆனந்துாரில் புறக்காவல் நிலையம் துவங்கப்பட்டது. ஆனால் மங்களக்குடியில் துவங்கவில்லை. இது குறித்து மங்களக்குடி மக்கள் கூறியதாவது:இப்பகுதியில் விபத்துக்கள் அதிகமாக நடக்கிறது. இரவில் நடைபெறும் அசம்பாவிதங்களுக்கு புகார் செய்ய இப்பகுதி மக்கள் 20 கி.மீ.,ல் உள்ள எஸ்.பி.பட்டினம், திருவாடானை போலீஸ் ஸ்டேஷன்களுக்கு செல்கின்றனர். போலீசாரும் சம்பவ இடங்களுக்கு உடனடியாக செல்ல முடியவில்லை. ஆகவே மங்களக்குடியை மையமாக வைத்து புறக்காவல் நிலையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி