உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பழந்தின்னி வவ்வால் பாதுகாக்கப்படுமா

பழந்தின்னி வவ்வால் பாதுகாக்கப்படுமா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மருத்துவ குணம் உள்ளதாகவும், இறைச்சிக்காவும் வவ்வால்கள் வேட்டையாடப்படுகின்றன. இதனால் வவ்வால் இனங்கள் அழியும் நிலையில் உள்ளன. அவற்றை காண்பதே அரிதாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பழங்களை உண்டு வாழும் வவ்வால் கிராமப்பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மரங்களில் பல ஆயிரம் பழந்தின்னி வவ்வால்கள் வாழ்கின்றன. அவற்றை சிலர் தொந்தரவு செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனால் நுழைவுப்பகுதியில் மரங்களில் வாழ்ந்து வந்த வவ்வால்கள் தற்போது உட்பகுதியில் சில மரங்களில் மட்டுமே காணப்படுகின்றன. எனவே அழிந்து வரும் பழந்தின்னி வவ்வால் இனத்தை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை