மேலும் செய்திகள்
2 கி.மீ., நடந்து சென்று சாப்பிடும் மாணவர்கள்
05-Nov-2024
பரமக்குடி: பரமக்குடி அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையில்ஆபத்தான முறையில் நடந்து செல்லும் நிலையில் நடை பாதை அமைக்க மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் முன் வருவார்களா என எதிர்பார்த்துஉள்ளனர்.பரமக்குடி அரசு கலைக்கல்லுாரி அழகப்பா பல்கலை இணைப்பு கல்லுாரியாக 1995-96ல் துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்தது. அப்போது கல்லுாரி நடத்த இடப் பற்றாக்குறை குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து அரசு ஐ.டி.ஐ., பின்புறம் கல்லுாரி கட்டப்பட்டு அங்கு செயல்பட்டு வருகிறது. கல்லுாரி காலை 9:00 முதல் மதியம் 1.30 மணி வரையும், மதியம் 1:30 முதல் மாலை 6:00 மணி வரை என இரண்டு ஷிப்டுகளாக செயல்படுகிறது. இந்த நேரங்களில் பல ஆயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் இருந்து போதிய பஸ் வசதி இல்லாததால் நாள்தோறும் இந்த ரோட்டில் மாணவர்கள் நடக்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும் குறுகிய பாலங்கள் மற்றும் வளைவான பகுதிகள் உள்ளதால் ஆபத்தான நிலையில் நடக்கின்றனர். இதற்காக கடந்த காலங்களில் ஐ.டி.ஐ., பகுதியை ஒட்டி நடைமேடை அமைக்க ஆய்வுகள் நடத்தப்பட்டது. ஆனால் எந்த முன்னேற்றமும் இன்றி திட்டத்தை அப்படியே கிடப்பில் விட்டனர்.தற்போதைய சூழலில் வாகன போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் நிலையில் ஏராளமான விபத்துக்கள் நடக்கிறது. இதில் மாணவர்களின் உயிர்களும் பறிபோய் உள்ளது.ஆகவே எம்.எல்.ஏ., உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் நடைமேடை அமைக்க உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
05-Nov-2024