காற்றின் தாக்கம் பதநீர் உற்பத்தி பாதிப்பு
சாயல்குடி: சாயல்குடி சுற்றுவட்டார கிராமங்களில் அதிகளவு பனை மரங்கள் உள்ளன. இங்கு மிகுதியாக காணப்படும் பனை மரக்காடுகளில் குடிசை அமைத்து குடும்பத்துடன் தங்கியிருந்து பதநீர் எடுத்து அவற்றின் மூலமாக கருப்பட்டி காய்ச்சும் பணிகளை பனைமரத்தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பெய்த கோடை மழையின் தாக்கத்தால் பதநீர் உற்பத்தி பாதிப்பை சந்தித்தது. காற்றின் தாக்கமும் பதநீர் உற்பத்திக்கான சூழ்நிலையை குறைக்கிறது. பனைத் தொழிலாளர்கள் கூறியதாவது: அதிகமாக வீசும் மேல்காத்து எனப்படும் சோளக்காற்றால் பனை மரத்தில் பதநீர் எடுக்கக்கூடிய பாளையில் சுரக்கும் நுண்துவாரம் காய்ந்து விடுகிறது. இதனால் மிக குறைவாகவே சுரக்கும். இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் உற்பத்தி அதிகமாக இருக்கும் என்றனர்.