உள்ளூர் செய்திகள்

கார் மோதி பெண் பலி

சிக்கல்: வாலிநோக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் செப்.8ல் அடையாளம் தெரியாத கார் மோதியதில் 45 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காயமடைந்தார்.அப்பெண்ணை அக்கம் பக்கத்தில் இருந்த தன்னார்வலர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குறித்த எவ்வித தகவலும் இல்லாத நிலையில் இது குறித்து வாலிநோக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை