மேலும் செய்திகள்
வாளுடன் ஸ்டேட்டஸ் பதிவிட்டவர் கைது
04-Jan-2025
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாலன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லதா 36. நேற்று மாலை பரமக்குடி அருகே பார்த்திபனுாரில் துணை முதல்வர் உதயநிதியை வரவேற்க அப்பகுதி பெண்களுடன் இவரை தி.மு.க.,வினர் அழைத்துச் சென்றுள்ளனர்.மேலப் பெருங்கரை அருகே நான்கு வழிச்சாலையில் வாகனத்தை நிறுத்தி ரோட்டோரம் இறங்கி நின்றுள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற கார் மோதியதில் லதா சம்பவ இடத்திலேயே பலியானார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பார்த்திபனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Jan-2025