மேலும் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் குரங்குகள் அட்டகாசம்
07-May-2025
ராமநாதபுரம்: முதுகுளத்துார் அருகே மேலக்கொடுமலுார் ஊராட்சி தட்டானேந்தல் கிராம மக்கள் குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.தட்டானேந்தல் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஊரில் 150 குடும்பத்தினர் வாழ்கின்றனர். குடிநீர் சரியாக வருவது இல்லை. ரோடு பராமரிப்பு இல்லாமல் குண்டும் குழியுமாக கிடக்கிறது. புகார் அளித்தால் குடிநீர் சிலநாட்கள் வருகிறது அதன் பிறகு நிறுத்தி விடுகின்றனர். சுத்தமில்லாத லாரி தண்ணீரை குடிப்பதால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தினசரி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். புதிய ரோடு அமைக்க வேண்டும். குளியல் தொட்டி கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தினர்.
07-May-2025