உள்ளூர் செய்திகள்

உலக ஓசோன் தின விழா

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை பாக்கிய ரோசரி தலைமை வகித்தார். தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கருணாகரன் ஓசோன் தின விழா குறித்தும், இயற்கையை பாதுகாப்பதற்கான வழிமுறைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்னர் ஓசோன் தினம் குறித்து பொது மக்களிடம் துண்டு பிரசுரங்கள் கொடுத்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி