உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உலக தண்ணீர் தின விழா

உலக தண்ணீர் தின விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை சார்பில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வன தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை பாக்கிய ரோசரி தலைமை வகித்தார். பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் தலைமையில் மாணவர்கள் மரக்கன்றுகள் நடவு செய்து தண்ணீர் தினத்தின் முக்கியத்துவம் குறித்தும், வன பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மூலிகை தோட்டம் பராமரித்தல், நெகிழி ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர். உடற்கல்வி ஆசிரியர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி